பக்கம் எண் :

96எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

வறுமையின் கொடுமை

வறுமையால் வாடுவோர்க்கு வாழ்க்கையிலே இன்பம் இல்லை. அவர்கள் உற்றார் உறவினர் நண்பர்களாலும் வெறுக்கப்படுவார்கள். பொருளற்றவர்கள் இவ்வுலகிலே புழுவாய்த் துடித்துத்தான் சாக வேண்டும். ஆதலால் பொருளீட்டும் முயற்சி ஒவ்வொருவர்க்கும் வேண்டும் என்ற உறுதியான கொள்கை தமிழர்களிடம் இருந்தது.

‘‘தம் நயந்து உறைவோர்த் தாங்கித், தாம்நயந்து
இன்அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார், நல்கூர்ந்தோரே;                                 (பா. 151)

வறியவர்களால் தம்மை விரும்பி வாழும் சுற்றத்தினரைக் காப்பாற்ற முடியாது: தாம் விரும்பி - நல்ல அன்பு காட்டுகின்ற - நட்பினருடன் இன்புற்றுக் கலந்து வாழவும் முடியாது. ’’

‘‘நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்.
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ,
ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்லை;                                (பா. 279)

வறியோர்க்கு நண்பர்கள் இல்லை; அவர்களுடைய உறவினர்களின் துன்பத்தை அவர்களால் களையவும் முடியாது; அவர்கள் விரோதிகள் செல்வச் செருக்கால் இகழ்வார்கள். இவ்வறியவர்கள் இவற்றையெல்லாம் கண்டு. தாங்கள் வாழும் இடத்தில் நிலைத்து வாழ விரும்பமாட்டார்கள்.

‘‘இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர் ஆயினும், ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென்;                                              (பா. 335)

துன்பவிருள் பொதிந்த நெஞ்சமுடைய ஏழைகளின் துயரத்தைப் போக்க வேண்டும் என்ற இரக்கமுடையவர்