பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்97

களானாலும், பொருள் இல்லாவிட்டால் அவர்களால் என்ன செய்ய முடியும்? பொருள் இன்றேல் ஏழைகளின் மனத்துயரை மாற்றவே முடியாது. இவ்வுண்மையை நானும் அறிவேன். ’’

வறுமையின் இயல்பை எடுத்துக்காட்டும் இத்தகைய பாடல்கள் பல அகநானூற்றிலே காணப்படுகின்றன.

நீதியுரைகள்

மக்கள் பின்பற்றவேண்டிய அறவுரைகள் பலவற்றை அகநானூற்றுப் பாடல்களிலே காணலாம்.

“இல்லோர்க்கு இல்என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம்.                                             (பா. 53)

இல்லையென்று சொல்லிக்கொண்டு வந்து இரந்தோர்க்குத், தன்னால் முடிந்ததை இல்லையென்று சொல்லி மறைப்பதற்குத் துணிவில்லாத வலிமையற்ற நெஞ்சம். ’’

இல்லாதவர்க்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்; இதுவே மனிதத்தன்மை; என்ற கருத்தை வலியுறுத்துகின்றது இது.

‘‘நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
பயன் இன்மையின் பற்றுவிட்டு ஒரூஉம்
நயனின் மாக்கள்.                                               (பா. 71)

செல்வம் நிறைந்திருக்கும் காலத்தில் நட்பு செய்வர்: செல்வம் குறைந்துவிட்டால். செல்வம் நிறைந்திருக்கும் வேறு மனிதரைத் தேடும் பொருட்டுப் பிரிவர்: செல்வம் குறைந்தவர்களால் தனக்குப் பயனில்லை என்று கருதி அவருடைய பழைய தொடர்பை விட்டுவிடுவர்; இவர்கள் நன்றியறிவற்ற விலங்குகள். ’’

ஒருவர்க்குச் செல்வமுள்ள காலத்தில் அவருடைய உதவி பெற்று வாழ்வதும், அவர் செல்வத்தை இழந்து