| 102 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
தலைமகளோ தன் பக்கத்தில் தலைமகன் இல்லாமையால் ஏங்கிக் கிடக்கின்றாள். ஆயினும் கணவன் சொல்லை நம்பித் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு உயிர்வாழ்கின்றாள். அவளுடைய உடல், இளைத்து விட்டது. அணிந்த வளையல்கள் கழன்று விடுகின்றன; ஆடை குலைகின்றது. அவள் பக்கத்திலே விளக்கு எரிந்து கொண்டிருக்கின்றது. தலைவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை மட்டும் தளரவில்லை. இச்சமயத்தில் போருக்குச் சென்ற தலைவன் வெற்றி முழக்கத்துடன் திரும்பி வருகின்றான். அவன் வருகின்ற தேரின் ஆரவாரம், சோர்ந்து கிடந்த தலைவிக்கு மகிழ்ச்சியை ஊட்டுகின்றது. இதுவே இந்தப் பாட்டின் அமைப்பாகும். இந்தப் பாடலின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில்-தமிழ்மக்களிடையில்-குடிகொண்டிருந்த பல பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம் அவற்றை ஆராய்வோம். முல்லை நிலத் தெய்வம் ஒவ்வொரு நிலத்து மக்களுக்கும் ஒவ்வொரு தெய்வம் உண்டு. முல்லைக்குத் திருமால் தெய்வம். குறிஞ்சிக்கு முருகன் தெய்வம். மருதத்திற்கு வேந்தன் தெய்வம். நெய்தலுக்கு வருணன் தெய்வம். பாலைக்குத் தனித் தெய்வம் இல்லை. பாலை தனி நிலமன்று. நான்கு நிலங்களிலும் மழை வளங்குறைந்தால்-நீர்வளம் பாழ்பட்டால்-ஒன்றும் விளையாத வறண்ட நிலமாக மாறினால்-அது பாலை நிலமாகும். எந்த நிலத்தில் பாலை நிலம் தோன்றுகிறதோ அந்த நிலத்தின் தெய்வமே அந்தப் பாலைக்கும் தெய்வம். இதவே தொல்காப்பியம் கூறுவது. பிற்காலத்தார் பாலையைத் |