பக்கம் எண் :

முல்லைப்பாட்டு 103

தனி நிலமாக்கி அதற்குக் காளியைத் தெய்வமாகக் கற்பனை செய்தனர்.

இந்நூலாசிரியர் முதலிலே மழை பெய்யும் மாலைக்காலத்தைக் குறிப்பிடுகின்றார். கடலிலிருந்து புறப்பட்டு-மலையிலே போய்த் தங்கி-வானத்திலே தோன்றி-மழை பெய்யும் மேகத்தைத் திருமாலுக்கு ஒப்பிட்டு உரைக்கின்றார். அந்த மேகத்தை, "மாபலிச் சக்கரவர்த்தி தாரை வார்த்த தண்ணீர் கையிலே பட்டவுடன் உயர்ந்து வளர்ந்த திருமாலைப் போன்ற மேகம்" என்று உவமானத்துடன் உரைக்கின்றார்.

"தண்ணீர் கையிலே பட்டவுடன் உயர்ந்து வளர்ந்த திருமாலைப் போல மேகங்கள் காட்சி தருகின்றன. அவைகள் ஓசையமைந்த குளிர்ந்த கடல் நீரைப் பருகின. வெற்றியுடன் புறப்பட்டன. மலைகளை உறைவிடமாகக் கொண்டு தங்கின. பின்பு அந்த மேகங்கள் விரைவாக வானத்தின் வழியே சென்றன. பெரிய மழையைப் பொழிந்தன. இத்தகைய நிலையற்ற மாலைக்காலம்," இதனை

நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன்ஏர்பு
கோடுகொண்டு, எழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை           (3--6)

என்ற அடிகளால் அறியலாம். முல்லை நிலத்தின் 'தெய்வமாகிய திருமாலை முதலில் இவ்வாறு உவமைப் பொருளில் வைத்துக் கூறியது குறிப்பிடத்தக்கது.

பிரார்த்தனையும் சகுனமும்

தங்களுக்கு நேர்ந்த துன்பத்தைத் தவிர்க்கும்படி வழிபடு தெய்வத்தை வணங்கி வேண்டிக் கொள்ளும் வழக்கம்