பக்கம் எண் :

104பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

சங்ககாலத் தமிழர்களிடம் இருந்தது. நெல்லையும் மலரையும் தெய்வத்தின் முன்னே சொரிந்து நின்று வணங்கி வரம் கேட்பார்கள்.

இப்பொழுதும் நாம் ஒரு காரியத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது மணியோசை கேட்டால்-நாய் சிலுப்பினால்-பல்லி சொன்னால்-கழுதை கத்தினால் நல்ல சகுனம் என்று நம்புகின்றோம். தெருவோடு எவரேனும் "வெற்றி" என்று சொல்லிக் கொண்டுபோனால் அதைத் தெய்வ வாக்காகக் கருதுகின்றோம். நாம் பேசிக்கொண்டிருக்கும்-அல்லது நினைத்துக்கொண்டிருக்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்றோம். இதுபோன்ற வணக்கத்திலும் சகுனத்திலும் பழந்தமிழர்களுக்கு நம்பிக்கை இருந்தது. இதை முல்லைப்பாட்டிலே சொல்லியிருக்கும் ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு அறியலாம்.

மாரிக்காலம் வந்துவிட்டது. தலைவனைக் காணவில்லை. மனம் வெதும்பியிருக்கின்றாள் தலைவி. அதைக் கண்ட அவளுடைய செவிலித்தாய், கைத்தாய் முதலியவர்கள் ஊருக்குப் புறத்தேயுள்ள திருமாலின் கோயிலுக்குப் போனார்கள். நாழியிலே கொண்டுபோன நெல்லையும் புதிய முல்லை மலர்களையும் கலந்து தூவி மாயோனிடம் நல்வாக்கு கேட்டு நின்றனர்.

இச்சமயத்திலே சிறிய தாம்பில் பிணித்திருக்கும் இளங்கன்றுகள் தங்கள் தாய்ப்பசுக்களைக் காணாமல் வருந்துகின்றன. அக்கன்றுகளின் துயரைக்கண்ட ஆயர்மகள், பிடரியிலே கைகளை வைத்துக்கொண்டு அக்கன்றுகளுக்கு ஆறுதல் கூறினாள். “கோல் பிடித்த கோவலர்கள் பின்னேவர இப்பொழுதே உங்கள் தாய்மார்கள் வந்துவிடுவார்கள் என்று கூறினாள். இச்சொற்களைத் திருமாலை வணங்கி நின்ற