| 106 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |  
 
  இன்றும் யானைப் பாகர்களின் நிலைமை இதுதான். இவ்வுண்மையை ஒரு யானையின் செயலைப் பற்றியும், பாகர்கள் அந்த யானையை அடக்குவதைப் பற்றியும் கூறுவதன் மூலம் எடுத்துக்காட்டுகிறார் இந்நூலாசிரியர்.  காவல்காத்து நின்ற-கன்னத்தின் வழியே மதநீர் ஒழுகுகின்ற-சிறு கண்களையுடைய யானை ஒன்று. அது நீண்ட கரும்பையும், நெற்கதிரையும், வயலிலே விளைந்த அதிமதுரத் தழையையும் உணவாகப் போட்டும் அவைகளை உண்ணவில்லை. அவைகளைக் கையால் எடுத்து தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டு, கையிலே வைத்திருந்தபடியே நின்றது. அதைக் கண்ட யானைப்பாகர்களாகிய இளைஞர்கள் அங்குசத்தைக் கொண்டு, செவியாரலாகக் கேட்ட வடமொழிகளைக் கூறி-அதட்டி அந்த யானையை உண்ணும்படி செய்தனர்.  காவல்நின்ற தேம்படு கவுள சிறுகண் யானை, ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த வயல் விளையின்குளகு உண்ணாது, நுதல் துடைத்து-அயில் நுனை மருப்பின் தன் கையிடைக் கொண்டெனக், கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவளம் கைப்ப.                  (30-36) இவ்வடிகளால் மேலே கூறிய நிகழ்ச்சியைக் காணலாம்.  பாசறையில் பெண்கள் பெண்கள் பாசறைக்குச் செல்லும் வழக்கம் பண்டைக்காலத்திலிருந்தது. அரசன் போருக்குப் போகும்போது அவர்களையும் அழைத்துச் செல்வான். அப்பெண்கள் இராக்காலத்திலே அரசனுடைய படுக்கையறையைப் பாதுகாக்கும் காவலர்களுக்குத் துணை செய்வார்கள். விளக்கு அணையாமல்   |