மாரிக்காலத்து மலர்கள் மாரிக்காலத்திலே, கானகத்திலே கண்ணைக் கவரும்படி பூத்திருக்கும் மலர்கள் பல. அவைகளைக் காண்போம். செறியிலைக் காயா அஞ்சனம் மலர நிறைந்த இலைகளையுடைய காசாஞ்செடிகள் மையைப்போல மலர்ந்திருக்கின்றன. “முறியிணர்க் கொன்றை நன்பொன்கால தளிரையும் பூங்கொத்துக்களையுமுடைய கொன்றை நல்ல பொன்னைச் சொரிந்தது. (கொன்றை மலரின் நிறமும் பொன்னிறமும் ஒன்று) கோடல் குவிமுகை அங்கை அவிழ வெண்காந்தளின் குவிந்த மொட்டுக்கள் உள்ளங்கையைப் போல மலர்ந்தன.” தோடார் தோன்றி குருதி பூப்ப நிறைந்திருக்கின்ற தோன்றிச் செடிகள் இரத்தம் போலப் பூத்திருக்கின்றன. இவ்வாறு மாரிக்காலத்திலே பூத்திருக்கும் மலர்களைப் பற்றிக் கூறுகிறது முல்லைப்பாட்டு. இன்னும் சில தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படையென்னும் நால்வகைப் படைகள் அக்காலத்தில் இருந்தன. |