110 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
பாவை விளக்குகள் இருந்தன. பாவை விளக்கு என்பது ஒரு பெண் இரு கையையும் இணைத்துக் குவித்து ஏந்திக்கொண்டு நிற்பதுபோல் செய்யப்பட்ட பதுமை. அந்த ஏந்திய கையிலே எண்ணெய் ஊற்றித் திரியிட்டுக் கொளுத்தி வைப்பார்கள். இதை இக்காலத்தில் இலக்குமி விளக்கென்றும் கூறுவர். பல அடுக்குகளையுடைய மாளிகைகள் அக்காலத்தில் கட்டப்பட்டிருந்தன. இத்தகைய அரிய பல செய்திகளை இந்தச் சின்னஞ்சிறு நூலிலே காணலாம். |