பக்கம் எண் :

  

7. மதுரைக்காஞ்சி

இது பத்துப்பாட்டுள் ஆறாவது பாட்டு. எல்லாப் பாட்டுக்களையும்விட இதுவே பெரியது. 782 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் ஆகியது.

மதுரையை ஆண்ட மன்னனுக்குக் காஞ்சித் திணையைப்பற்றிக் கூறியது மதுரைக்காஞ்சி. காஞ்சியென்பது புறத்திணையுள் ஒருதிணை. புறத்திணை-புறவொழுக்கம். உலக இன்பம், செல்வம், இளமை, யாக்கை எல்லாம் நிலையில்லாதவை; ஆதலால் உயிருள்ளபோது உயர்ந்த நன்னெறியில் நடந்து இன்புற்று வாழ்வதே மக்கள் கடமை என்ற உண்மையை எடுத்துக்காட்டுவதே காஞ்சித் திணை, பொதுவாக உலகமும், உலக இன்பமும் அழிந்து விடக் கூடியவை என்பதை அறிவிப்பதே காஞ்சித்திணை.

ஆசிரியர்

இந்நூலாசிரியர் மாங்குடி மருதனார்; இவர் மிகச்சிறந்த புலவர், பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அவைக் களத்துப் புலவர்கள் அனைவருக்கும் தலைவராய் விளங்கியவர், பாண்டியன் நெடுஞ்செழியனால் பாராட்டப்பட்டவர்.

“மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவா.