பக்கம் எண் :

மதுரைக்காஞ்சி113

சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படும் பாண்டியன் நெடுஞ்செழியனும் இவனும் ஓருவனே என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் இந்த மதுரைக் காஞ்சியில் சிலப்பதிகாரத்தைப்பற்றிய பேச்சு ஓரிடத்திலேனும் காணப்படவேயில்லை. இது குறிப்பிடத்தக்கது.

இந்த நெடுஞ்செழியன் தமிழ்ப்புலவன். புறநானூற்றில் உள்ள 72வது பாடல் இவன் பெயரில் உள்ளது. இப்பாண்டியனைப்பற்றி மாங்குடி மருதனார், குடபுலவியனார், கல்லாடனார், மாங்குடிகிழார், இடைக்குன்றூர்கிழார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று ஒருவன் குறிக்கப்படுகிறான். அவனும் இவனும் ஒருவன்தானா என்பது ஆராயத்தக்கது.

பாட்டின் அமைப்பு

பாண்டியன் நெடுஞ்செழியன் தமிழ்நாடு முழுவதையும் தனித்தாண்டவன், இணையற்ற வீரன், போர்செய்வதையே பொழுதுபோக்காகக் கொண்டிருந்து வந்தவன், நால்வகைப் படைகளையும் நல்லமுறையிலே பெருக்கி வைத்திருந்தான், செல்வச்செருக்கால், உலகப் பொருள்களும், உலக இன்பமும் அழிந்துவிடக் கூடியவை என்பதை மறந்திருந்தான்.

இவனுடைய உற்ற நண்பர் மாங்குடி மருதனார்; உலக நிலையாமையை இவனுக்கு உணர்த்த எண்ணினார். அவனைப்பார்த்து முதலில் அவன் முன்னோர்களின் அரசியல் நேர்மையை எடுத்துக்காட்டினார். அதன்பின், முன்னோர் முறையிலே தவறாமல் அவன் புரிந்துவரும் அரசியல் சிறப்பையும் பாராட்டினார். அவனுடைய அஞ்சாமை, வீரம், அருஞ்செயல்கள் ஆகியவற்றைப் போற்றினார். இறுதியில்