| 114 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
அவனுடைய சிறந்த குணங்களை அவன் சிந்தை மகிழும்படி எடுத்துச் சொன்னார். இவ்வளவையும் எடுத்துக்காட்டியபிறகு, “பாண்டியனே! உன்னைப் போலவே இவ்வுலகிலே எண்ணற்ற மன்னர்கள் வீரர்களாக - செல்வமுடையவர்களாக கொடையாளிகளாகச் சிறந்து வாழ்ந்தனர். அவர்களுடைய எண்ணிக்கை கடல்துறையிலே அலைகள் கொண்டுவந்து குவிக்கும் மணலைக்காட்டினும் பல. அவர்களெல்லாம் புகழுடன் வாழ்ந்தனர்; முடிவிலே மாநிலத்தைவிட்டு மறைந்து போயினர்” என்று நிலையாமையை எடுத்துக்காட்டினார். இதன்பின் பாண்டிய நாட்டின் இயற்கை வளத்தைப் பாராட்டினார். அந்நாட்டிலே அமைந்துள்ள மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல் ஆகிய ஐந்திணைகளின் ஆக்கங்களையும் அழகாகப் பாடினார். அதன்பின் வையையாற்றின் வளத்தைப் புகழ்ந்தார். வையையின் தென்பால் அமைந்துள்ள மதுரை நகரத்தின் மாண்பைப் பாராட்டினார். அந்நகரத்தில் நடைபெறும் பலவகையான நிகழ்ச்சிகள்-வாணிகம், தொழில்கள் எல்லாவற்றையும் எடுத்துக்காட்டிப் புகழ்ந்தார். நெடுஞ்செழியனுடைய நேர்மையான ஆட்சிமுறையை விளக்க நினைத்தார்; அதற்கு ஆதரவாக மதுரையில் இருந்த நீதி மன்றத்தின் சிறப்பைக் கூறினார். வணிகர்களின் நடுநிலையைப் பற்றி நாவாரப் புகழ்ந்தார், மதுரை நகரில் வாழும் மக்களுடைய சிறந்த வாழ்க்கையைப் பற்றியும் சொன்னார். இறுதியில் “உன் காதல் மகளிருடன் கலந்து உண்டு மகிழ்ந்து வாழ்க” என்று நெடுஞ்செழியனை வாழ்த்தினார். இந்த முறையிலேயே இந்நூலை அமைத்துப் பாடியிருக்கிறார் ஆசிரியர் மாங்குடி மருதனார். இந்நூலைப் பொருளறிந்து |