பக்கம் எண் :

மதுரைக்காஞ்சி119

இடையிலே வெள்ளம் பெருகியோடும் ஆறுகளைப்போல் காணப்படுகின்றன.

இவ்வாறு மதுரை நகரத்தின் வெளிப்புறத் தோற்றத்தையும், உட்புறத் தோற்றத்தையும் இவ்வாசிரியர் எழுதிக் காட்டுகிறார்.

மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடக்கின,்
விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை,
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை,
நெய்படக்கரிந்த திண்போர்க்கதவின்
மழையாடு மலையின் நிவந்த மாடமொடு,
வையை யன்ன வழக்குடை வாயில்            (351-356)

இவ்வடிகள் மதுரையின் புறநகர்த் தோற்றத்தைக் காட்டுவன.

வகைபெற எழுந்து வானம்மூழ்கிச்,
சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்,
யாறுகிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்              (357-359)

இவ்வடிகள் மதுரையின் அகநகர்த் தோற்றத்தை அப்படியே காட்டுகின்றன.

கொடிகள்

பண்டைக் காலத்தில் கொடிகளையே விளம்பரக் கருவிகளாகக் கொண்டிருந்தனர். இதனை இந்நூலினாலும், பட்டினப்பாலையாலும் காணலாம். இந்நூலிலே விழாக்கொடி, வெற்றிக்கொடி, வியாபாரக் கொடி எனப் பலவகையான கொடிகள் மதுரை நகரிலே பறந்து கொண்டிருந்தன என்று கூறப்படுகின்றது.

“கோயில்களிலே திருவிழாக்கள் நடத்தியபோது கட்டிய பலவகையான கொடிகள் பறக்கின்றன.