பக்கம் எண் :

120பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

அரசனுடைய தளபதிகள் அவன் ஆணை பெற்றுச் சென்று அடங்காதவர்களுடன் போர் செய்கின்றனர்; அவர்களுடைய கோட்டைகளைப் பிடிக்கின்றனர்; அவ்வாறு பிடிக்குந்தோறும் அவ்வெற்றிகளைக் காட்டுவதற்காகப் பல கொடிகள் பறக்கவிடப்படுகின்றன.

அரசன் கடல்போன்ற தனது சேனையுடன் சென்று- எதிரிகளின் யானைப்படைகளை ஓட்டி-வெற்றி பெற்றதற்கு அடையாளமாகக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன.

உயர்ந்த மதுபானம் கிடைக்கும் இடத்தை அறிவிக்கும் கொடி பறந்து கொண்டிருக்கின்றது.

இவை போன்ற இன்னும் பல கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. இக்கொடிகள் பறந்து கொண்டிருக்கும் தோற்றம் பெரிய மலையிலிருந்து வீழும் அருவி நீரைப் போலக் காணப்படுகின்றது.

சாறு அயர்ந்து எடுத்த உருவப்பல்கொடி;
வேறுபல் பெயர் ஆர் எயில்கொளக்கொள
நாள் தோறெடுத்த நலம்பெறு புனைகொடி;
நீர் ஒலித்தன்ன நிலவுவேல் தானையொடு
புலவுப் படக்கொன்று மிடைதோல் ஒட்டிப்
புகழ் செய்து எடுத்த விறல்சால் நன்கொடி;
கள்ளின் களிநவில் கொடியொடு
பல்வேறு குழூஉக்கொடிப் பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க:           (366 - 374)

இவ்வாறு கூறி மதுரையிலே பறக்கின்ற கொடிகளை நம்கண் முன்னே காட்டுகிறார்.