பக்கம் எண் :

மதுரைக்காஞ்சி121

கோவில்கள்

மதுரை நகரிலே இப்பொழுதும் சிறப்பாக விளங்குவது சொக்கநாதர் கோவில். இப்பொழுதிருப்பது போலவே இந்நூலாசிரியர் காலத்திலும் சிவன்கோயில் சிறந்து விளங்கிற்று. மற்றும் பல தெய்வங்களுக்கும் கோயி்ல்கள் இருந்தன.

“பஞ்ச பூதங்களால் இவ்வுலகைப் படைத்த-மழுப்படையையுடைய பரமசிவனைத் தலைவனாகக் கொண்டவர்கள்; குற்றமற்ற ஒளியையுடையவர்கள்; வாடாத மலர்மாலையையும், இமையாத கண்களையும் உடையவர்கள்; மணம் வீசும் மதுமாமிசங்களைப் பலியாகக் கொள்ளும் அஞ்சத்தக்க பெரிய தெய்வங்கள்; அவர்களுக்குத் தவறாமல் உயிர்ப்பலி கொடுப்பதற்காக அந்திக்கால விழாவுக்குரிய வாத்தியங்கள் முழங்கின.

நீரும் நிலனும் தீயும் வளியும்
ஆக விசும்போடு ஐந்துடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவனாக,
மாசற விளங்கிய சூழ்சுடர்,
வாடாப்பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவின், உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபின் உயர்ப்பலி கொடுமார்
அந்தி விழவில் தூரியம் கறங்க:"        (453 - 466)

இந்த அடிகளால் மதுரையிலே பல தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்ததையும், அவைகளுக்கு மாலைக் காலத்திலே தவறாமல் பூசைகள் நடைபெற்று வந்தன என்பதையும் காணலாம்.

பள்ளிகள்

பள்ளி என்ற சொல் இக்காலத்தில் பள்ளிக் கூடத்தைக் குறித்து வழங்குகின்றது. பண்டைக் காலத்தில் இச்சொல்