பக்கம் எண் :

12பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

நெல் முதலிய உணவுப் பண்டங்கள் அளவுக்குமேல் விளைந்தன. கடலோரங்களிலே உப்பும் மீனும் கணக்கின்றிக் கிடந்தன. மக்கள் தானியங்களையும், காய்கறிகளையும், ஆடு, பன்றி, மான், உடும்பு, கோழி, மீன் முதலியவற்றையும் மகிழ்ச்சியுடன் சமைத்துச் சாப்பிட்டனர். பால், தயிர், மது முதலியவைகளையும் அருந்தி மகிழ்ச்சியடைந்தனர்.

விருந்தோம்பலில் தமிழர்கள் தலை சிறந்தவர்கள். ஏழை மக்களும் தம்மிடம் வந்த விருந்தினர்க்குத் தாம் உண்ணும் உணவைத் தந்து உபசரிப்பார்கள்.

பருத்தி விளைவுக்குப் பஞ்சம் இல்லை. கொட்டைக் கரைபோட்ட பட்டாடைகளையும், பருத்தியாடைகளையும் நெய்தனர். மென்மையும் வழவழப்பும் உள்ள ஆடைகள் நெய்யப்பட்டன.

வானை முட்டும் பெரிய மாளிகைகள் இருந்தன; கோட்டை கொத்தளங்கள் இருந்தன; நடுத்தர மக்கள் வாழ்வதற்கான ஒரு கட்டு, இரண்டு கட்டு வீடுகள் இருந்தன; வறியோர் வாழும் சிறு குடிசைகளும் இருந்தன.

சங்கீதம், நடனம் முதலிய கலைகள் வளர்ந்திருந்தன; சங்கீதக் கருவிகள் எல்லாம் தமிழ் நாட்டிலேயே செய்யப்பட்டன.

மக்கள் ஏறிச் செல்வதற்கான ஊர்திகள் பல இருந்தன. பண்டங்களை ஏற்றிச் செல்வதற்கான வண்டிகள் இருந்தன. கடலிலே பிரயாணம் செய்யக் கப்பல்கள் இருந்தன; தோணிகள் இருந்தன.

சிற்பத் தொழில் சிறந்திருந்தது; ஓவியத் தொழில் உயர்ந்திருந்தது. பொன், வெள்ளி, மாணிக்கம், முத்து போன்ற செல்வங்கள் இருந்தன; இவைகளால்