பக்கம் எண் :

மதுரைக்காஞ்சி125

வகையான பண்டங்கள் குவிந்து கிடக்கும். உணவுப்பண்டங்கள் நிறைந்திருக்கும், மலைகளிலிருந்தும், நிலத்திலிருந்தும், நீரிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் பலவகையான இரத்தினங்களையும், முத்துக்களையும்,பொன்னையும் பெற்றுக் கொள்ளுவார்கள். அவைகளுக்கு ஈடாகப் பல நாடுகளிலிருந்தும் கொண்டு வந்து குவித்திருக்கின்ற சிறந்த பல பண்டங்களைக் கொடுப்பார்கள். இத்தகைய சிறந்த வணிகர் பலர் மதுரை நகரிலே வாழ்ந்தனர்.

அறவழி பிழையாது ஆற்றின் ஒழுகிக்,
குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்திருந்து உவக்கும் பன்மாண் இல்லில்,
பல்வேறு பண்டமோடு ஊண்மலிந்து கவினி,
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல்வேறு திருமணிமுத்தமொடு பொன்கொண்டு
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்க்கும்,”      (500-506)

இவ்வடிகள் வணிகர்களின் நேர்மையையும் வளத்தையும் காட்டுகின்றன.

தொழிலாளர்கள்

மதுரை நகரிலே பலவகைத் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். அத்தொழிலாளர்கள் யார் யார் என்பதை அறிந்தால், அக்காலத்தில் தமிழர்கள் எத்தகைய நாகரிகம் படைத்திருந்தனர்; மதுரை நகரம் எவ்வளவு சிறப்புடன் விளங்கிற்று என்பதைக் காணலாம்.

“அறுத்த சங்கை வளையல் முதலிய அணிகலன்களாகக் கடைபவர்கள் இருந்தனர்.

இரத்தினங்களிலே துளையிட்டு அவைகளை மாலையாகக் கோத்துக் கொடுப்போர் இருந்தனர்.