பக்கம் எண் :

126பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

புடம் போட்டெடுத்த பொன்னால் நல்ல ஆபரணங்களைச் செய்யும் தட்டார்கள் இருந்தனர்.

புடவைகளை விலை கூறி விற்கும் வியாபாரிகள் இருந்தனர்.

செம்பை நிறுத்து விலைக்கு வாங்கும் செம்பு வியாபாரிகள் இருந்தனர்.

புதிய உடைகளிலே பூவேலை செய்து கொடுப்போர் இருந்தனர்.

மலர்களையும,் புகைக்கக்கூடிய அகில், சந்தனம் முதலிய தூள்களையும் ஆராய்ந்தெடுத்து விற்பனை செய்வோர் வாழ்ந்தனர்.

எதையும் பார்த்தது பார்த்தபடியே எழுதக்கூடிய-நுண்ணிய அறிவு படைத்த-சித்திரக்காரர்கள் இருந்தனர்."

கோடுபோழ் கடைநரும், திருமணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடர்இழை புனைநரும்,
பொன்உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்,
செம்புநிறை கொண்மரும், வம்புநிறைமுடிநரும்
பூவும்புகையும் ஆயும் மாக்களும்,
எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி,
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் விளைஞரும்.                      (611-618)

இவ்வடிகள் மதுரையிலிருந்த பலவகைத் தொழிலாளர்களைக் காட்டுகின்றன.

விலைமகளிர்

மதுரை நகரத்தில் விலைமகளிர் பலர் இருந்தனர். பழந்தமிழ்நாட்டில் விபசாரமும் நிலைத்திருந்தது. செல்வக் குடியினரே