| 128 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
கொண்டல் மலர்ப்புதன் மானப் பூவேய்ந்து நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி, மாயப்பொய்பல கூட்டிக், கவவுக்கரந்து, சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி, நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும் மென்சிறை வண்டினம் மானப், புணர்ந்தோர் நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து; (568-575) என்ற அடிகளால் அறியலாம். விலைமாதர்கள் இசை, நடனம் முதலிய கலைகளில் தேர்ந்திருந்தனர். தம்மைக் கண்ட இளைஞர்கள் மயங்கும் படி அலங்கரித்துக் கொள்ளும் திறமையுடையவர்களாயிருந்தனர். தெய்வலோகத்துப் பெண்களைப் போலக் காட்சியளித்தனர். இத்தகைய பரத்தையர்களை, வெற்றி கொண்ட வேந்தன் பகைவர் நாட்டிலிருந்து சிறைப்பிடித்து வருவதும் உண்டு. இப்படிச் சிறைப்பிடிக்கப்பட்டு வந்த மகளிர்க்குக் “கொண்டி மகளிர்” என்ற பெயர் வழங்குவதும் உண்டு. இக்கொண்டி மகளிரைப் பற்றியும் மாங்குடி மருதனார் குறிப்பிட்டிருக்கின்றார். நல்ல விளக்கு வெளிச்சத்திலே பல பெண்களுடன் நெருங்கி நிற்பார்கள். நீல நிறமுள்ள வானத்திலே நின்று விளையாடும் தெய்வ மகளிரைப் போலக் காணப்படுவார்கள். தம்மைக் காணும் இளைஞர்களின் நெஞ்சத்தைக் கலக்கி விடுவார்கள். இத்தகைய கொண்டி மகளிர் யாழோடு இசைந்து நின்ற மத்தளத்திற்கு ஏற்ப மகிழ்ந்து நடனமாடுவார்கள். ஆழமான நீர்த்துறையில் உள்ள மணல் திட்டுக்குப் போவார்கள். அங்கேயுள்ள மரக்கொம்புகளின் தளிர்களைக் கொய்வார்கள். நீர் நிறைந்த மலர்களுடன் நீண்டதாகத் தொடுத்த குவளை மலர் மாலையைப் பாதம் வரையிலும் தொங்கும்படி அணிந்து |