பக்கம் எண் :

மதுரைக்காஞ்சி129

கொள்வார்கள். நறுமணம் வீசும் வீடுகள் தோறும் சென்று இளைஞர்களுடன் விளையாடுவார்கள்.

ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி,
நீனிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவர் மகளிர் மானக், கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉம்,கொண்டி மகளிர்
யாமநல்யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் சூடிக், குண்டு நீர்ப்
பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென்தளிர்க்
கொழுங் கொம்பு கொழுதி, நீர்நனை மேவர
நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி,
மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயர      (580-589)

இவ்வடிகளிலே விலைமாதர்களின் திறமையையும் அவர்கள் செயலையும் விளக்கியிருப்பதைக் காணலாம்.

கள்வரும் காப்பாரும்

இந்நூலாசிரியர்கள் காலத்திலே பாண்டியநாடு செல்வங்கொழிக்கும் சிறந்த நாடாகத்தான் இருந்தது. மதுரையும் எல்லாச் செல்வங்களும் நிறைந்த எழில் நகராகத்தான் திகழ்ந்தது. ஆனால் அந்நகரத்திலே வறுமை காரணமாகத் திருடிப் பிழைக்கும் கள்வர்களும் இருந்தனர். அத்திருடர்களைப் பிடிக்கும் காவலர்களும் இருந்தனர்.

திருடர்கள் களவுத் தொழிலை ஒரு கலையாகக் கற்றிருந்தனர். காவலர்களும் கள்வர்களின் சூழ்ச்சிகளை அறிவிக்கும் களவு நூலைக் கற்றிருந்தனர்.

“அக்காலக் கள்வர்கள் இருட்டிலே தம்மை யாரும் காணாமல் இருப்பதற்காக யானைத்தோலைப் போன்ற நிறமுடைய கருஞ்சட்டை அணிந்திருப்பர்.