| 132 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
என்று கொண்டாடும்படி செய்யப்பட்ட புலவுச்சோறு, பூமியிலே விளைந்து முற்றிய கிழங்கு ஆகியவைகளைக் கொண்டு வருவார்கள். அங்கே காத்திருக்கும் வறிஞர்களுக்கு அளிப்பார்கள். சேறும் நாற்றமும் பலவின்சுளையும், வேறுபடக் கவினிய தேமாங்கனியும், பல்வேறு உருவிற் காயும், பழனும் கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி மென்பிணி, அவிழ்ந்த குறுமுறி அடகும், அமிர்து இயன்றன்ன தீஞ்சோற்றுக் கடிகையும், புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும், கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும், இன்சோறு தருநர் பல்வியன்நுகர. (527 - 535) இவ்வடிகளால் மதுரைநகரிலே பிறரிடம் பிச்சையேற்றுண்ணும் வறியர்களும் வாழ்ந்தனர்; அவர்களுக்கு அன்னமளிக்கும் செல்வர்களும் வாழ்ந்தனர் என்பதை காணலாம். வாழ்க்கையின்பம் மறுவுலக வாழ்க்கையைப் பற்றி நேரே கண்டறிந்தவர்கள் யாரும் இல்லை. மதநூல்களும், புராணங்களும் தான், மாண்டபின்னும் நன்மை தீமை களைத் தரும் உலகம் உண்டென்று கூறுகின்றன. அவற்றை நம்புவோர் பலர்; நம்பாதோர் சிலர் எவரும் இவ்வுலக இன்பத்தை வெறுப்பதில்லை. எல்லா மக்களும் இவ்வுலகில் இனிது வாழவே விரும்புகின்றனர். இவ்வாறு வாழ விரும்பும் உரிமை எவர்க்கும் உண்டு. பண்டைத் தமிழர்கள் இவ்வுலகில் துன்பமின்றி இன்புற்று வாழ்வதை வெறுக்கவில்லை. எல்லோரும் இன்புற்று இனிது வாழவேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். இக்கொள்கையை |