| 138 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
இந்நூலிலே எவ்விடத்தும் நெடுஞ்செழியனுடைய பெயர் சுட்டப்படவில்லை. மதுரைநகரைப் பற்றிக்கூட வெளிப்படையாகக் கூறப்படவில்லை. அரசனுடைய தளபதியைக் குறிக்கும்போதுவேம்பு தலையாத்த, நோன்காழ் எஃகமொடு முன்னோன்(176 - 177) என்று கூறுகிறார் இவ்வாசிரியர். "வேப்பமலர் மாலையைத் தலையிலே தரித்துக் கொண்டிருக்கிறவன்; வலிமையான காம்பினையுடைய வேற்படையொடு விளங்கும் படைத்தலைவன்" என்பதே இதன் பொருள். படைத்தலைவன் வேப்பமலர் மாலையை அணிந்திருந்தான் என்பதனால் இப்பாட்டில் குறிக்கப்படும் அரசன் பாண்டியனேதான். இப்பாட்டின் இறுதியிலே "வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே" என்று முடிகின்றது. "மன்னர் பலரொடு பகைத்துப் போர் செய்த போர்க்களத் தொழில்" என்பது இதன் பொருள். பாண்டியன் நெடுஞ்செழியன் பல மன்னர்களைப் போரிலே வெற்றிக் கொண்டவன். சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் ஏழு மன்னர்களையும் போரிலே புற முதுகிட்டோடும்படி செய்தவன். தலையாலங்கானம் என்ற இடத்திலே இந்த எழுவருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். இவனால் வெல்லப்பட்ட எழுவருள் சேர மன்னன் சிறைபிடிக்கப்பட்டான். இச்சேர மன்னன்தான் "கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ என்பவன். "பலரொடு முரணிய பாசறைத் தொழில்" என்பதில் உள்ள பலர் என்பது இவன் பகைவர்களான எழுவரையும் குறித்தது. பாசறை என்பது தலையாலங்கானத்துப் போர்க்களத்தைக் குறித்தது. பத்துப்பாட்டின் உரையாசிரியரான நச்சினார்க்கினியர் |