பக்கம் எண் :

140பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

இந்த முறையிலே இப்பாடலை அமைத்துப் பாடியிருக்கின்றார் ஆசிரியர் நக்கீரர். இப்பாட்டிலே மழைகாலத்தின் இயற்கையையும், தமிழர் நாகரிகத்தையும் காணலாம்

புதுவீடு கட்டுதல்

தமிழர்கள் புதுவீடு கட்டத் தொடங்கும்போது நல்ல நாள் பார்த்து அடிப்படை போடுவார்கள். அப்பொழுது தெய்வத்தை வணங்குவார்கள்; பூசிப்பார்கள். கட்ட வேண்டிய மனையை நல்ல நேரத்திலே நூல் பிடித்துச் சதுரிப்பார்கள். எங்கெங்கே கடைக்கால் எடுக்க வேண்டும் என்று அடையாளமிடுவார்கள். இவ்வழக்கம் இன்றும் உண்டு.

மிகுந்த பணம் போட்டுக் கட்டும் பெரிய கட்டடங்களுக்குக் கட்டடக் கலையிலே வல்ல எஞ்சினியர்கள் திட்டம் போட்டுக் கொடுக்கின்றனர்; அவர்களுடைய மேற்பார்வையிலே கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

இதைப் போலவே பண்டைத் தமிழகத்திலே கட்டடக் கலையைக் கற்றறிந்த நிபுணர்கள் இருந்தனர். அவர்கள் தாம் பெரிய கட்டடங்களைக் கட்டுவதற்கான திட்டங்களை வகுத்துக்கொடுப்பார்கள். அவர்கள் மனையைச் சதுரிக்கும் போது திசைகளை வணங்குவார்கள்; தெய்வத்திற்குப் பலி கொடுப்பார்கள். இச்செய்தி இநத் நெடுநல்வாடையிலே காணப்படுகிறது.

"கதிரவன் ஒரு பக்கத்திலும் சாயாமல் உச்சியிலே நிற்கும் நடுப்பகலில்தான் மனையைச் சதுரிக்கத் தொடங்குவார்கள். மனையடி சாத்திரங்களைக் கற்றறிந்த அவர்கள் கூர்மையாக ஆராய்ந்து-கயிறுபிடித்து-மைையைச் சதுரிப்பார்கள். திசைகளையும் வணங்கித் தெய்வத்தையும் வேண்டிக் கொண்டு மன்னர்கள் வாழ்வதற்குத் தக்கபடி மனையிலே