பக்கம் எண் :

நெடுநல்வாடை145

குடியர்கள்

மாரிக்காலத்திலே குடியர்கள் பாடுதான் கொண்டாட்டம்; குடிகாரர்கள் குளிரால் நடுங்க மாட்டார்கள். குடிவெறியால் ஆனந்தமாகக் கூத்தாடுவார்கள். இன்னும் குளிர்ப்பிரதேசத்திலே வாழ்கின்றவர்கள் குடியை ஒரு போகப்பொருளாகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

குடிவெறியர்கள் மாரிக் காலத்தில் எப்படித் திரிகின்றார்கள் என்பதை நக்கீரர் நன்றாக எடுத்துக்காட்டியிருக்கின்றார்.

"முறுக்கேறிய உடல்வலிமை படைத்தவர்கள்; அறிவற்றவர்கள்; அவர்கள் வண்டுகள் மொய்க்கின்ற கள்ளைக் குடித்தார்கள்; கள்ளின் வெறியால் களிப்பு மிகுந்தார்கள்; அதனால் அவர்கள் மழைத்துளியைப் பொருட்படுத்தவில்லை. நேரத்தையும் பொருட்படுத்தவில்லை. இரண்டு முனையையுடைய ஒரே துணியுடன் அவர்கள் விரும்பிய இடங்களில் எல்லாம் வெற்றுடம்போடு திரிந்துகொண்டிருந்தார்கள்.

முடலை யாக்கை முழுவலி, மாக்கள்,
வண்டுமூசு தேறல்மாந்தி, மகிழ்சிறந்து
துவலைத் துண்டுளிபேணார் பகலிறந்து,
இருகோட்டு அறுவையர், வேண்டுவயின் திரிதர           (32 - 35)

இவ்வடிகளிலே குடியர்களின் செயலைக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறு குடித்துவிட்டுத் திரிகின்றவர்களை "மாக்கள்" என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது; மாக்கள் என்றால் மிருகங்கள் என்று பொருள்.

விளக்குகள்

பண்டைக்காலத்தில் எண்ணெய் ஊற்றித் திரியிட்டுக் கொளுத்தும் விளக்குகளே இருந்தன. இந்த விளக்குகள்