பக்கம் எண் :

146பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

இரும்பினால் செய்யப்பட்டன. மண்ணாலும் செய்யப்பட்டன. செம்பினாலும் செய்யப்பட்டன. பல கிளைகளையுடைய விளக்குகளும் இருந்தன. யவனர்களால் செய்யப்பட்ட பாவை விளக்குகள் இருந்தன. அவ்விளக்குகளைத் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் தமிழ் நாட்டுக்கும் கிரேக்க நாட்டுக்கும் வியாபாரத்தொடர்பு இருந்ததென்று தெரிகிறது.

"யவனரால் செய்யப்பட்டது" வேலைப்பாடு அமைந்தது; பெண்ணுருவாகச் செய்யப்பட்டது; அதன் கையில் ஏந்தியிருக்கின்ற அகலில் நிரம்பிய எண்ணெய் ஊற்றினர். பருமையான திரியைப் போட்டு அதனைக் கொளுத்தினர். அந்தத் திரி ஒளியுடன் தலை நிமிர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றது. என்று இவ்வாறு யவனரால் செய்யப்பட்ட பாவை விளக்கைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதனை

யவனர் இயற்றிய, வினைமாண் பாவை,
கையேந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து,
பரூஉத்திரி கொளீஇய, குரூஉத்தலை நிமிர்எரி;             (101 - 103)

என்ற அடிகள் காட்டும்.

இன்னும் பல செய்திகள்

இந்நூலின் மூலம் இன்னும் பல பழக்கவழக்கங்களைக் காணலாம்.

இடையர்கள் மழைக்காலத்து வெள்ளத்தைக் கண்டு வெறுக்கின்றனர். தங்கள் ஆடு மாடுகளை வெள்ளம் வராத மேட்டு நிலத்தை நோக்கி ஓட்டிக் கொண்டு போகின்றனர். மிகவும் துக்கத்துடனேயே அவர்கள் வேறிடத்திற்குப் போகின்றனர். தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டுப் பிரிவதிலே அவ்வளவு வருத்தம் அடைகின்றனர். இதனை