| 148 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
அந்தக் கட்டில்களிலே பலவிதமான சித்திர வேலைப்பாடுகளும் செய்திருப்பர். கட்டிலின் மேற்புறத்தில் கட்டியிருக்கும் துணியிலே சந்திரனும் உரோகிணியும் சேர்ந்திருப்பதுபோன்ற சித்திரம் தீட்டியிருப்பார்கள். இந்நூல் செய்த காலத்திலே இவைபோன்ற பல தொழில்கள் வளர்ச்சியடைந்திருந்தன. இவைபோன்ற பல செய்திகளையும், தமிழர்களின் சிறந்த நாகரிகங்களையும் இந்நூலிலே காணலாம். நக்கீரரின் சிறந்த புலமைக்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. |