பக்கம் எண் :

நூலின் விளக்கம்15

அவர்களிடம் உயர்வு தாழ்வோ, வகுப்புச் சண்டைகளோ தலைகாட்டவில்லை. அனைவரும் ஒன்றுபட்டு அன்புடன் வாழ்ந்தனர்.

சின்னஞ்சிறிய தமிழ் நாட்டில் முடிமன்னர்கள் பலர் அரசாண்டனர்; குறுநில வேந்தர்கள் பலர் கோலோச்சினர். அடிக்கடி இவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டேயிருந்தன. நாடுபிடிக்கும் பேராசையால் அவர்களுக்குள் சண்டை நடைபெறவில்லை. வீரத்தையும் புகழையும் விரும்பியே சண்டைபோட்டனர். அடங்காதாரை அடக்குவதற்காகச் சமர்புரிந்தனர். குடிமக்களைக் கொடுமைப்படுத்தும் கொடுங்கோலர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர். அப்பொழுது நாட்டை ஆண்டவர்கள் முடிமன்னர்களும் நிலத்தலைவர்களுந்தான். குறுநில மன்னர்கள், வள்ளல்கள் என்று பெயர் பெற்றவர்கள் அனைவரும் பெருநிலத் தலைவர்களேயாவர்.

செல்வம் செழித்திருந்த அக்காலத்திலும் இந்நாட்டிலே ஏழைகள் பலர் இருந்தனர். உணவு, உடை, வாழ்விடம் இல்லாமல் வருந்தித் திரிந்த வறிஞர்கள் பலர் இருந்தனர். உயர்ந்த மாட மாளிகைகளிலே உல்லாசமாகப் பொழுதுபோக்கும் நிலப் பிரபுக்களும் இருந்தனர். கற்றவர்கள் சிலர்; கல்லாதவர்கள் பலர். ஆனால் அனைவரிடமும் மனிதத் தன்மை குடிகொண்டிருந்தது. அன்பு, நல்லொழுக்கம், மானம், மரியாதை, மற்றவர்க்கு உதவி செய்தல், நம்பிக்கைக்கு உரியராதல் ஆகியவை மனிதத்தன்மைக்கு அடையாளங்கள். இத்தகைய பழந்தமிழ் நாட்டைப் பத்துப்பாட்டிலே காணலாம்.

பத்துப்பாட்டு

இவ்வளவு சிறப்புடைய பத்துப்பாட்டு என்பது சங்கத் தமிழ் நூல்களில் ஒன்று. இது ஒரு தொகை நூல். அதாவது