பக்கம் எண் :

16பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

பத்துப்பாடல்களை ஒன்றாகச் சேர்த்துத் தொகுக்கப்பட்டதொரு நூல். திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன அவை.

முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

என்ற வெண்பாவினால் இதைக் காணலாம். இப்பாட்டில் உள்ள வரிசைப்படியே பத்துப் பாடல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றுள் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படைகள் என்னும் பெயரில் அமைந்திருக்கின்றன. அவை திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்பவை. திருமுருகாற்றுப்படைக்குப் புலவர் ஆற்றுப்படை என்பது மற்றொரு பெயர். மலைபடுகடாம் என்பதற்குக் கூத்தர் ஆற்றுப்படை என்பது வேறொரு பெயர்.

பத்துப்பாட்டைப் பாடிய புலவர்கள் எண்மர். அவர்கள் நக்கீரனார், முடத்தாமக்கண்ணியார், நத்தத்தனார், உருத்திரங்கண்ணனார், நப்பூதனார், மாங்குடிமருதனார், கபிலர், கௌசிகனார் என்பவர்கள். இவர்களில் நக்கீரனாரும், உருத்திரங்கண்ணனாரும் இரண்டிரண்டு பாடல்களை இயற்றியிருக்கின்றனர். மற்றவர்கள் பாடியது ஒவ்வொன்றே.

பாடப்பட்டவர்கள் அறுவர். அவர்கள் முருகன், சோழன் கரிகாற் பெருவளத்தான், பாண்டியன் நெடுஞ்செழியன்,