பக்கம் எண் :

150பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

இறந்தான். அதன் பிறகு அவனுடைய மகளிர் இருவரையும் நல்ல இடத்திலே மணம் செய்து கொடுப்பதற்காக அரும்பாடுபட்டார். பாரிக்கும் இவருக்கும் இருந்த தொடர்பைப்பற்றிப் புறநானூற்றுப் பாடல்களிலே காணலாம்.

சங்க நூல்களிலே இவருடைய பாடல்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய எட்டுத்தொகை நூல்களிலே இவருடைய பாடல்கள் பல உள்ளன. இவைகளிலே பெரும்பாலான பாடல்கள் குறிஞ்சித்திணையைப் பற்றியே கூறுகின்றன.

ஐங்குறுநூற்றிலே குறிஞ்சியைப் பற்றிய நூறு பாடல்கள் இவர் இயற்றியவை. கலித்தொகையிலே குறிஞ்சிக்கலி இவர் பாடியது. பதிற்றுப்பத்திலே ஏழாம்பத்து இவரால் பாடப்பட்டது. இந்தக் குறிஞ்சிப்பாட்டு இவர் தந்த செல்வம்.

மலையைப் பற்றி-மலைவளத்தைப் பற்றி-மலைநாட்டு மக்களாகிய குறிஞ்சிநில மக்களின் பழக்க வழக்கப் பண்பாடுகளைப் பற்றிப் பாடுவதிலே இவருக்கு நிகர் யாருமில்லை. இவர் குறிஞ்சி நிலத்திலேயே வாழ்ந்தவர்; குறிஞ்சி நிலமாகிய பறம்பு மலையிலே பாரியுடன் பல காலம் இருந்தவர். ஆகையால் இவர் தாம் நன்றாகக் கண்டறிந்த, குறிஞ்சித்திணையைப் பற்றியே ஏராளமாகப் பாடியிருக்கின்றார்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இன்னா நாற்பதும் இவர் பெயரால் காணப்படுகின்றது.

பிற்காலத்திலே கபிலரைப் பற்றி வழங்கும் கதைகள் பல. இக்கபிலரைத் திருவள்ளுவ நாயனாருடன் பிறந்தவர் என்றும் கூறுவர். கபிலதேவநாயனார் என்பவரையும் இவரையும் இணைத்து முடி போடுவர். ஆரியர், திராவிடர் வேற்றுமைக்கு அடிகோலும் "கபில அகவல்" என்னும் ஒரு