| 152 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
ஆண்டுகளுக்கு முன்பே தமிழரோடு கலந்துவிட்டனர். தமிழ்ச் சுவையறிந்து தமிழ் வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதற்குக் குறுந்தொகையின் 184வது பாட்டும், ஆரிய அரசன் பிரகதத்தனைக் குறிஞ்சிப்பாட்டின் தலைவன் என்று கூறப்படும் கதையும் சான்றுகளாம். இந்தக் குறிஞ்சிப்பாட்டு எந்தத் தனி மனிதனைக் குறித்தும் பாடப்பட்டதன்று; குறிஞ்சித்திணையைப் பற்றி விளக்கமாகப் பாடவேண்டும் என்னும் வேட்கையுடன் கபிலர் தாமே கனிந்து பாடிய கவிச் செல்வமாகும். குறிஞ்சிப்பாட்டைப் பற்றி இவ்வாறு முடிவு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும். நூலின் அமைப்பு குறிஞ்சி நில ஒழுக்கத்தை அழகுற அமைத்துக் காட்டுவதிலே இந்நூலுக்கு இணையாக எதையும் சொல்லமுடியாது. ஒரு நிகழ்ச்சியை- அந்த நிகழ்ச்சியில் உள்ள கருத்தை-கற்போர் உள்ளத்தைக் கவரும்படி எழுதிக்காட்டும் சிறுகதைபோல அமைந்திருக்கிறது இந்நூல். இந்த நூலின் மூல பாடத்தைப் பொருளறிந்து படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம். குறிஞ்சி நிலத் தலைவனுடைய மகள் ஒருத்தி. இவள் தான் தலைவி; மணப்பருவமடைந்த மங்கை. அவளுடைய தோழி ஒருத்தி, தலைவியின் செவிலித்தாய் ஒருத்தி, இவர்களுள் தோழி, தலைவியைப்பற்றி செவிலித்தாயிடம் சொல்லுவதுபோல அமைக்கப்பட்டது இப்பாட்டு. தலைவி உள்ளம் வருந்தியிருக்கின்றாள். அவள் உடலும் நாளுக்குநாள் நலிவடைகின்றது. இதைப் பார்த்த செவிலித்தாய், குறி சொல்வோரிடமெல்லாம் தன் மகளுடைய நோய்க்குக் காரணம் கேட்கின்றாள். பல தெய்வங்களுக்கும் |