பலியிட்டுத் தன் மகளின் நோய் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றாள். இதைக்கண்ட தோழி, செவிலித் தாயைப் பார்த்துக் கூறுகிறாள்: "அன்னையே! தலைவியின் நோய்க்குக் காரணம் காணாமல் நீயும் வருந்துகின்றாய். தலைவியும் தன் உள்ளத்துயரை உரைக்க முடியாமல் மூடிக் கொண்டிருக்கிறாள். நான் தலைவியைக் கேட்டேன். உன் உள்ளத்திலேயிருப்பதை ஒளிக்காமல் சொல்" என்று வற்புறுத்தினேன். "என் காதல் மணத்தைப்பற்றி வெளியிடுவதனால் நமது குடிக்குப் பழி ஏற்படுமோ என்று அஞ்சுகின்றேன். என் பெற்றோர் என் காதலனுக்கு, என்னை ஊரார் அறிய மணம்புரிந்து கொடுக்காவிட்டாலும், மறுபிறப்பிலேனும் அவரும் நானும் ஒன்றுபட்டு இன்புறுவோம் என்று எண்ணுகின்றேன்" எனக் கூறிக் கண்கலங்கினாள் தலைவி. நானும் உண்மையைச் சொல்ல அஞ்சுகின்றேன். ஆயினும் உங்கள் சம்மதமில்லாமல் நாங்கள் முடிவு செய்த காரியத்தைப் பற்றி இப்பொழுது தெளிவாகத் தெரிவித்துவிட விரும்புகின்றேன். எங்கள் மேல் கோபம் கொள்ள வேண்டாம். தினைப்புனம் காப்பதற்கு எங்களை நீதான் அனுப்பி வைத்தாய். நாங்களும் தினைக்கதிர்களைப் பறவைகள் பாழ்பண்ணாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் உச்சிப்பொழுதில் நல்ல மழை பெய்தது. பறவைகள் தங்கள் இருப்பிடங்களுக்குப் பறந்து போய் அடங்கிவிட்டன. இச்சமயத்தில் நாங்கள் அருவி நீரில் ஆடினோம். அகமகிழ்ந்து பாடினோம். பல மலர்களைத் தேடிப்பறித்து மலைப்பாறையிலே குவித்தோம். கிளிகளைத் துரத்தும் |