பக்கம் எண் :

154பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

சொற்களை உரத்துச் சொல்லிக் கொண்டே மலர்களைத் தொடுத்தோம். தலைகளிலே தரித்துக் கொண்டோம். ஓர் அசோக மரத்து நிழலிலே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தோம்.

இச்சமயத்தில் கண்கவரும் வனப்பினன் கட்டிளைஞன்-ஒருவன் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தான். அவன் கையிலே வில்லும் கணைகளும் இருந்தன. அவனுடன் வேட்டை நாய்களும் தொடர்ந்து வந்தன. அந்த வேட்டை நாய்கள் எங்களை வளைத்துக் கொண்டன. நாங்கள் அஞ்சி அவ்விடத்தை விட்டு விரைந்து நடந்தோம்.

உடனே அவன் இனிய சொற்களால் எங்களை அழைத்தான். நாங்களும் நின்றுவிட்டோம். எங்களுடைய கூந்தலைப் புகழ்ந்தான். "இவ்விடத்திலே நான் ஒன்றைக் காணாமற் போட்டுவிட்டேன். அதை நீங்கள் கண்டீர்களா" என்று கேட்டான். நாங்கள் ஒன்றும் புரியாமல் சும்மா நின்றோம். "காணாமற் போட்டதைத் தேடித் தராவிட்டாலும் என்னுடன் ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா?" என்று கேட்டுக்கொண்டு நின்றான்.

இச்சமயத்தில் கானவர்களால் விரட்டப்பட்ட யானையொன்று எங்களை நோக்கி ஓடி வந்தது. நாங்கள் பயந்துவிட்டோம். எங்கள் நாணத்தையும் துறந்தோம். மயில்போல் நடுநடுங்கி அந்தக் காளையிடம் நெருங்கி நின்றோம்.

அருள் கனிந்த அவ்விளைஞன் அந்த யானையின் மேல் அம்பெய்தான்; அது வலியழிந்து வந்த வழியைப் பார்த்து ஓடிப்போயிற்று.

நாங்கள் நடுக்கத்துடன் அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்தோம் அப்பொழுது அவன் தலைவியைப் பார்த்து "நீ பயப்படாதே உன் அழகை நான் அனுபவிப்பேன்"