பக்கம் எண் :

குறிஞ்சிப்பாட்டு161

மலையிலிருந்து கீழே விழும் அருவி நீரை ஆடைக்கு ஒப்பிடுகிறார்.

உயர்ந்த மலையுச்சியிலிருந்து விழுகின்ற தெளிந்த நீர் வெண்மையாக விளங்குகின்ற ஆடையைப் போல் காணப்படுகின்றது.

அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு தெண்ணீர்
அவிர்துகில் புரையும் அவ்வெள் அருவி"            (54--55)

நாய்களின் தோற்றத்தைப் பற்றியும் அவைகளின் செயலைப் பற்றியும் அப்படியே படம் எழுதிக் காட்டுகின்றார்.

பகைவர்களைப் புறமிட்டு ஓடச்செய்த-பலவாகிய வேற்படைகளையுடைய-இளைஞர்களைப்போல-மிகுந்த கோபமும் கர்வமும் கொண்டவை. நெருங்கினால் கோபிக்கும் குணமுடையவை. வாள்போல் கூர்மையான பற்களையும் கூர்மையான நகங்களையும் உடைய நாய்கள்.

பகை புறங்கண்ட பல்வேல் இளைஞரின்
உரவுச்சினம் செருக்கித், துன்னுதொறும் வெகுளும்
முளைவாள் எயிற்ற, வள்ளுகிர் ஞமலி             (129-131)

இவைகளால் நாய்களின் தோற்றத்தைக் காணலாம்.

மாலைக்கால நிகழ்ச்சியைப் பற்றி இவர் கூறியிருப்பது மனதைக் கவரும்.

மான்கணம் மரம் முதல் தெவிட்ட

மான் கூட்டம் மரத்தின் அடியிலே படுத்துக்கொண்டு அசைபோடுகின்றன.

ஆன் கணம்
கன்றுபயிர் குரல, மன்று நிறைபுகுதர