| 10. பட்டினப்பாலை பத்துப்பாட்டுள் இது ஒன்பதாவது பாட்டு. 301 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் ஆகியது.  பட்டினப்பாலை-பட்டினத்தைப் பற்றிச் சொல்லுவது; பாலைத்திணையைப் பற்றிக் கூறுவது. பட்டினம் என்பது கடற்கரையில் உள்ள ஊர்களைக் குறிக்கும். இந்தப் பட்டினம் காவிரிப்பூம்பட்டினத்தைக் குறித்தது. இக்காலத்தில் பட்டணம் என்றால் சென்னையைச் சுட்டுவதுபோல் அக்காலத்தில் பட்டினம் என்றால் காவிரிப்பூம்பட்டினத்தைச் சுட்டிற்று.  காதலன் காதலியை விட்டுப் பிரிவதைப் பற்றியும் பிரிந்து போவதற்கான காரணத்தைப் பற்றியும் சொல்லுவது பாலைத்திணை.  கணவனும் மனைவியும் இல்லறம் நடத்துகின்றனர். இல்லறத்தை இனிது நடத்துவதற்காகப் பொருள்தேடும் பொருட்டு மனைவியைப் பிரிந்து தனியாக வேற்றூர்க்கோ வேற்று நாட்டுக்கோ போக நினைக்கிறான் கணவன். அவன் எண்ணத்தை மனைவி அறிந்தாள்; கணவன் பிரிவுக்காக நெஞ்சம் கலங்கினாள். அதைக் கண்ட கணவன் "எவ்வளவுதான் செல்வம் கிடைப்பதாயினும் இவளைப் பிரியமாட்டேன்" என்று தனக்குள் உறுதி செய்துகொள்கிறான். பின்னர் பிரிந்து செல்வதற்காக, இப்பொழுது அவளுக்குச் சமாதானம்  |