கூறிப் பிரயாணத்தை நிறுத்தி வைக்கிறான். இதைப்பற்றிக் கூறுவதே பாலைத் திணையாகும். காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் தலைநகரம். கடல் துறைமுகம். சோழர் தலைநகரங்களிலே சிறந்தவை காவிரிப்பூம்பட்டினமும், உறையூருமாகும். சோழ மன்னர்களில் சிலர் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்; சிலர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். சங்க இலக்கியங்களிலே இந்த இருநகரங்களைப் பற்றியும் காணலாம். ஆசிரியர் இந்நூலைப் பாடிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பத்துப்பாட்டுள் நான்காவது பாட்டாகிய பெரும்பாண் ஆற்றுப்படையைப் பாடியவரும் இவரேதான். இவரது வரலாற்றைப் பெரும்பாண் ஆற்றுப்டை ஆராய்ச்சியிலே காணலாம். பாட்டின் தலைவன் இது சோழன் கரிகாற்பெருவளத்தான் மீது பாடப்பட்டது. இப்பாடலைக் கரிகாற்பெருவளத்தான் கேட்டு இன்பமும் மகிழ்ச்சியும் அடைந்தான். உருத்திரங் கண்ணனாரின் உயர்ந்த புலமையைப் புகழ்ந்தான்; அவருக்கு அவர் வறுமை நீங்கப் பதினாறுநூறாயிரம் பொன்னைப் பரிசளித்தான். இச்செய்தியைக் கலிங்கத்துப்பரணியிலே காணலாம். தழூவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப் பண்டு பட்டினப்பாலை கொண்டதும் என்பது கலிங்கத்துப் பரணிப் பாட்டு |