| 166 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
பொருநர் ஆற்றுப்படையென்னும் இரண்டாவது பாட்டும் இக்கரிகாலன் மீது பாடப்பட்டதுதான். அந்நூலாசிரியராகிய முடத்தாமக்கண்ணியார் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை விரிவாக விளக்கவில்லை. சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கிறார். ஆனால் கரிகாலனுடைய வீரம், கொடை, ஆட்சி இவைகளைப் பற்றிப் பலவாறு பாராட்டியிருக்கிறார். இந்நூலாசிரியர் உருத்திரங்கண்ணனாரோ காவிரிப்பூம் பட்டினத்தின் சிறப்பைப் பற்றி விரிவாக விளம்பியிருக்கின்றார். கரிகாலனுடைய பெருமையைச் சுருங்கச்சொல்லி விளங்கவைத்திருக்கின்றார். கரிகாற்சோழனுடைய வரலாறு பொருநர் ஆற்றுப்படை ஆராய்ச்சியிலே கூறப்பட்டுள்ளது. பாட்டின் அமைப்பு இந்நூலாசிரியராகிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் தன் காதலியுடன் இல்லறம் நடத்தும்போது வறுமையால் வருந்தினார். தன் வறுமை நீங்கப் பரிசு பெறும்பொருட்டுக் கரிகால்வளவனிடம் போக நினைத்தார். அவர் கருத்தை அறிந்த அவர் மனைவி அவரைப் பிரிந்திருக்கவேண்டுமே என்றெண்ணி வருந்தினாள். அவளுடைய வருத்தந்தீர "நான் காவிரிப்பூம் பட்டினத்தையே பரிசாகப் பெறுவதாயிருந்தாலும் பிரிந்து செல்லமாட்டேன்" என்று அப்பொழுது தன் உள்ளத்தை நோக்கி உரைத்தார். இந்த முறையிலே இப்பாடலைப் பாடியிருக்கின்றார் புலவர். காவிரிப்பூம் பட்டினத்தைப்பற்றிச் சொல்லத் தொடங்கியவர் முதலிலே காவிரியாற்றின் பெருமையைக் கூறுகின்றார். பிறகு சோழநாட்டின் வளத்தைப் பாடுகின்றார். அதன்பின் காவிரிப்பூம் பட்டினத்தின் புறநகர்ப்பகுதிகள்; காவிரித்துறையின் பெருமை; நகருக்குள் இரவிலும் பகலிலும் நடைபெறும் |