| 170 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
அன்னசத்திரம், தருமசத்திரம் என்ற பெயர்களால் வழங்கினர். கூழ் என்பது உணவின் பொதுப்பெயர். அறக்கூழ்ச்சாலை - தருமத்திற்கு உணவிடும் இடம். சுங்கம் இக்காலத்திலிருப்பதைப் போலவே பண்டைக் காலத்திலும் இறக்குமதிப் பொருள்களுக்கும், ஏற்றுமதிப் பண்டங்களுக்கும் அரசாங்கம் வரி விதித்து வந்தது. இவ்வரிக்கு உல்கு, சுங்கம் என்ற பெயர்கள் வழங்கின. இத்தகைய வரியே அரசாங்கத்தின் முக்கிய வருமானம். காவிரிப்பூம் பட்டினத்துக் கடல் துறையிலே இறங்கும் பண்டங்களுக்கும் சுங்க வரியுண்டு. ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களுக்கும் சுங்க வரியுண்டு. நிலத்திலிருந்து வந்த பண்டங்களும், நீர் வழியாக வந்த பண்டங்களும் முதலில் சுங்கச்சாவடிக்குள் அனுப்பப்படும்; அவைகள் சுங்க அதிகாரிகளால் பரிசோதிக்கப்படும்; பரிசோதிக்கப்பட்டதற்கு அடையாளமாகச் சோழனுடைய புலி முத்திரையிடப்படும். பண்டத்தின் நிறைக்கும் அளவுக்கும் ஏற்ப வரி வாங்கப்படும். பிற நாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக வந்த பண்டங்களை நிலத்திலே இறக்கவும், உள்நாட்டிலிருந்து தரைமார்க்கமாக வந்த பண்டங்களைப் பிறநாடுகளுக்கு அனுப்புவதற்காகக் கடலில் உள்ள கப்பல்களில் ஏற்றவும் அளவற்ற பண்டங்கள் வந்து குவிந்து கிடக்கின்றன. அவைகள் எல்லையில்லாமல் வந்து நிறைந்து கிடக்கின்றன. நல்ல பாதுகாப்பையும் சிறந்த காவலையும் உடைய சுங்கச் சாவடியிலே அவைகளின் மேல் புலி முத்திரை பொறித்து வெளியிலே அனுப்புகின்றனர். நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும், அளந்தறியாப் பல பண்டம் |