பக்கம் எண் :

பட்டினப்பாலை171

வரம்பறியாமை வந்தீண்டி
அரும்கடிப் பெரும்காப்பின்
வலியுடை வல்அணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி                 (129--135)

இதனால் சுங்கவரி விதிக்கப்பட்டு வந்ததைக் காணலாம். பண்டங்கள் பாழடையாமலும், திருட்டுப்போகாமலும், சுங்கச்சாவடியிலே பாதுகாக்கப்பட்டன.

குவிந்திருக்கும் பண்டங்கள்

வியாபாரத்திற்காகக் காவிரிப்பூம்பட்டினத்திலே பல பண்டங்கள் வந்து குவிந்திருக்கின்றன. அவை உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்தவை. அப்பண்டங்களைப் பற்றி இந்நூலிலே விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.

நீரின் வந்த நிமிர்பரிப்புரவியும்

வேற்று நாடுகளிலிருந்து குதிரைகள் கடல் வழியாக வந்திருக்கின்றன; அவைகள் உயரமானவை; விரைந்து ஓடும் தன்மையுடையவை.

காலின் வந்த கரும்கறி மூடையும்

நிலத்தின் வழியே வண்டிகளில் கொண்டுவரப்பட்ட கரிய மிளகு மூட்டைகள்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

இமயமலையிலே பிறந்த சிறந்த மாணிக்கங்கள்; உயர்ந்த பொன்வகைகள்.

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

மேற்குத் தொடர்ச்சி மலையிலே விளைந்த சந்தனக்கட்டைகள், அகிற்கட்டைகள்.