பக்கம் எண் :

பட்டினப்பாலை173

நீண்ட நுகத்தடியிலே தைத்திருக்கும் நடு ஆணிபோல நடுநிலையிலே நிற்கும் நல்ல உள்ளமுடையவர்கள். பழிக்கு அஞ்சி உண்மையே பேசுவார்கள். தம்முடைய பொருளையும் பிறருடைய பொருளையும் ஒரு தன்மையாகவே நினைப்பார்கள். பொருளை வாங்குவோரிடம் அளவுக்கு மேல் அதிகமாக வாங்கிவிடமாட்டார்கள். தாங்கள் கொடுக்கும் பண்டத்தையும் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். பல பண்டங்களையும் அவ்வவற்றின் நியாயமான விலையைக் கூறி விற்பனை செய்வார்கள்.

நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுஅஞ்சி வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்பநாடிக்,
கொள்வதூஉம் மிகை கொளாது,
கொடுப்பதூஊம் குறை கொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்                 (206--211)

இவ்வடிகள் அக்கால வணிகர்களின் நேர்மையை விளக்குகின்றன.

வேளாளர் சிறப்பு

காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்திலே வேளாளர்கள் பலர் செல்வமுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் புலால் உண்ணாதவர்கள். சிறந்த ஒழுக்கமுடையவர்கள். இவர்கள் உழுவித்துண்ணும் வேளாளர்களாக இருந்திருக்கக்கூடும். பெரிய நிலத்தலைவர்கள் இவர்கள்.

கொலை செய்வதை வெறுத்தவர்கள்; களவு செய்வதைக் கருதாதவர்கள்; தேவர்களை வணங்குவார்கள்; அவர்களுக்கு வேள்வியின் மூலம் பலிகொடுப்பார்கள்; நல்ல பசுக்களையும், எருதுகளையும் பாதுகாப்பார்கள்; நான்கு