| 174 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |  
 
 வேதங்களையும் கற்றறிந்தவர்களின் புகழைப் பரவச் செய்வார்கள், வந்த விருந்தினர்க்குப் பல பண்டங்களைக் கொடுப்பார்கள்; நல்லொழுக்கத்திலிருந்து தவற மாட்டார்கள்; மேழிச்செல்வமே சிறந்தது என்று அதனை விரும்பிப் பாதுகாக்கும் உழவர்கள்.  கொலை கடிந்தும், களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும், நல்ஆனொடு பகடு ஓம்பியும் நான் மறையோர் புகழ் பரப்பியும், பண்ணியம் அட்டியும், பசும்பதம் கொடுத்தும் புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை கொடுமேழி நசை உழவர்;                    (199--205) இவ்வடிகள் காவிரிப்பூம்பட்டினத்திலே வாழ்ந்த வேளாளர்களின் சிறப்பையும், செல்வத்தையும், ஒழுக்கத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றன.  வலைஞர்கள் காவிரி்ப்பூம்பட்டினத்துக் கடற்கரையிலே வாழும் பரதவர்கள் ஓய்வு நாளிலே எப்படிப் பொழுதுபோக்குகிறார்கள் என்பதை இவ்வாசிரியர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.  முழுமதி நாளிலே, அதாவது பௌர்ணமியிலே கடலிலே கொந்தளிப்பிருக்கும். ஆதலால் அந்நாளில் பரதவர்கள் மீன்பிடிக்கக் கடல்மேற்போகமாட்டார்கள். ஓய்ந்திருந்து உல்லாசமாகப் பொழுதுபோக்குவார்கள். அவர்கள் எவ்வளவு இன்பமாகப் பொழுது போக்குகிறார்கள் என்பதை அப்படியே படத்தில் பார்ப்பதுபோல் இந்நூலிலே காணலாம்.  சினைகொண்ட சுறாமீன் கொம்பை நடுவார்கள். அதிலே கடல்தெய்வம் வாழ்வதாகக் கருதுவார்கள். அதற்குத் தாழைமலரைச்   |