| 178 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
இன்னும், பல வெவ்வேறு கொடிகளும் கலந்து காணப்படுகின்றன. அவைகள் பல்வேறு வடிவங்களாக அமைந்தவை. சூரியனுடைய கதிரும் நகரத்தில் நுழைய முடியாதபடி அக்கொடிகள் நெருங்கியிருக்கின்றன: நிழல் செய்து கொண்டிருக்கின்றன. பிறபிறவும் நனி விரைஇப், பல்வேறு உருவின் பதாகை நீழல் செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பின் (181--183) இவ்வாறு அந்நகரத்திலே பறந்து கொண்டிருக்கும் கொடி வகைகளைப்பற்றிக் கூறுகிறது பட்டினப்பாலை. 159 முதல் 183 வரையில் உள்ள அடிகள் மேலே காட்டப்பட்டவை. கோயில் வாசலிலே, ஏற்றப்பட்டுள்ள கொடி, திருவிழாவுக்காக ஏற்றப்பட்டிருக்கும் கொடி, பட்டிமண்டபத்திலே பறக்கும் கொடி, கப்பல்களிலே பறந்து கொண்டிருக்கும் கொடி, கள்ளுக்கடை வாசலிலே கட்டப்பட்டிருக்கும் கொடி ஆகியவைகளை மட்டும் குறிப்பிட்டுக் கூறப்பட்டது. மற்றும் எண்ணற்ற கொடிகள் பறந்துகொண்டிருக்கின்றன என்றும் பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. பத்துப்பாட்டும் பலநாட்டினரும் மொழியினரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டினர் வேறுபல நாட்டினருடன் வாணிகம் செய்து வந்தனர். வேறுபல மொழியினருடனும் பழகிவந்தனர். வேறுபல நாட்டினரும், மொழியினரும் தமிழ்நாட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டினரும் அவர்களும் மொழிவெறுப்பு, இனவெறுப்பு இல்லாமல் ஒன்றாக அன்புடன் பழகினர். இவ்வுண்மையை இந்நூலிலே காணலாம். "காவிரிப்பூம் பட்டினத்தின் வளத்தையும் சிறப்பையும் கருதி அங்கே பல நாட்டினர் வந்து குழுமி இருக்கின்றனர்; |