பக்கம் எண் :

18பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

ஆயிரம் அடிகளுக்கு மேற்படாமல் எத்தனை அடிகளில் வேண்டுமானாலும் எழுதலாம்.

ஆசிரியப் பாட்டின் அளவிற்கெல்லை
ஆயிரம் ஆகும்; இழிவு மூன்றடியே

(தொல், செய். 150)

வஞ்சிப்பா என்னும் பாடலையும் இந்த அளவில் இயற்றலாம் என்பது உரையாசிரியர்கள் கொள்கை.

இவ்விலக்கணம் பற்றியே பத்துப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பாட்டும் எழுதப்பட்டிருக்கின்றன, திருமுருகாற்றுப்படையின் அடிகள் - 317, பொருநர் ஆற்றுப்படையின் அடிகள் - 248, சிறுபாண் ஆற்றுப்படையின் அடிகள் - 269, பெரும்பாண் ஆற்றுப்படையின் அடிகள் - 500, முல்லைப்பாட்டின் அடிகள் - 103, மதுரைக் காஞ்சியின் அடிகள் - 782, குறிஞ்சிப்பாட்டின் அடிகள் - 261, பட்டினப்பாலையின் அடிகள் - 301, மலைபடுகடாத்தின் அடிகள் - 583.

பத்துப்பாட்டுள் உருவாற்சிறியது முல்லைப்பாட்டு; பெரியது மதுரைக்காஞ்சி; நடுத்தரமானவை பெரும்பாண் ஆற்றுப்படையும், மலைபடுகடாமும்.

பண்டைத் தமிழ்ப்புலவர்கள் உரைநடையிலே நூல்கள் எழுதவில்லை; செய்யுளிலேயே நூல்களைச் செய்தனர், இதற்குக் காரணம் உண்டு, உரைநடையில் எழுதினால் உருவில் பெரிதாகிவிடும், செய்யுளில் சுருக்கமாக எழுதலாம், இக்காலத்தில் ஆயிரக்கணக்கான நூல்களைச் சில மணி நேரத்தில் அச்சிட்டுக் குவித்துவிடலாம், இத்தகைய வசதி பண்டைக்காலத்தில் இல்லை, எல்லாவற்றையும் எழுத்தாணியால் பனையோலையிலே எழுதியாக வேண்டும், ஆகையால்தான் குறைந்த சொற்களிலே