பக்கம் எண் :

  

11. மலைபடுகடாம்

இதுவே பத்துப்பாட்டின் இறுதிப்பாட்டு. 583 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் ஆகியது. மதுரைக் காஞ்சிக்கு அடுத்து இதுதான் பெரிய பாட்டு;  பத்துப்பாட்டின் பத்தாவது பாட்டு.

மலைபடுகடாம்-மலையிலே தோன்றும் ஓசை.  மக்கள் வாழும் மலையிலே பலவகையான ஓசைகள் உண்டு. அவற்றுள் சிறப்பாக இருபது வகையான ஓசைகளைப் பற்றி இப்பாடலிலே சொல்லப்படுகிறது. ஆகையால் இந்நூலுக்கு மலைபடுகடாம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்குக் கூத்தர் ஆற்றுப்படை என்ற மற்றொரு பெயரும் உண்டு. கூத்தருக்கு வழிசொல்லி அனுப்பும் முறையிலே இந்நூல் பாடப்பட்டிருக்கின்றது. திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படைகள் எந்த முறையில் பாடப்பட்டுள்ளனவோ அந்த முறையிலேயே இந்த நூலும் அமைந்திருக்கின்றது.

ஆசிரியர்

இந்நூலாசிரியர் கௌசிகனார் என்பவர். பெருங்கௌசிகனார் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவருடைய ஊர் பெருங்குன்றூர். இவ்வூர் பாண்டிய நாட்டில் உள்ள