| 186 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
வீற்றிருக்கின்ற குறவர்கள் சங்கநாதம் செய்து ஆரவாரம் புரிகின்றனர். இலங்குஏந்து மருப்பின்இனம் பிரிஒருத்தல் விலங்கல், மீமிசைப் பணவைக்கானவர் புலம்புக்கு உண்ணும் புரிவளைப்பூசல் (297--299) 3. குகைக்குள்ளே பதுங்கியிருக்கும் முள்ளம்பன்றி தன் கூரிய முட்களை வெளியிலிருக்கும் கானவர்களின் மேல் வீசுகிறது. அதனால் கானவர் காயம்பட்டு அழுகின்றனர். சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின் எய்தெற விழுக்கிய கானவர் அழுகை (300--301) 4. கொடிச்சியர்கள் தங்கள் கணவர்களின் மார்பிலே புலிகள் பாய்ந்து கீறிய புண் ஆறவேண்டும் என்று பாடிக்கொண்டிருக்கின்றனர். கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின் நெடுவசி விழுப்புண் தணிமார், காப்பென அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல் (302--304) 5. முதல் முதலிலே பூத்த வேங்கை மலரைப் பறிப்பதற்காகப் பெண்கள் கூடிக்கொண்டு புலி புலி என்று ஆரவாரிக்கும் கூச்சல். தலைநாட் பூத்த பொன்இணர் வேங்கை மலை மார்இடூஉம் ஏமப்பூசல் (305--306) 6. கன்று போடும் பருவமுள்ள பெண் யானையை அதன் துணையான வலிமையுள்ள ஆண் யானை பாதுகாத்து அழைத்துக்கொண்டு போயிற்று. அப்பொழுது ஒரு புலி பாய்ந்து அப்பெண் யானையைக் கொன்றுவிட்டது. அது கண்ட ஆண்யானை தன் சுற்றமுடன் மலை அதிரும்படி இடியோசை போல் கதறுகின்றது. கன்றரைப்பட்ட கயந்தலை மடப்பிடி வலிக்கு வரம்பாகிய கணவன் ஓம்பலின், |