ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்கு குரல்          (307--310) 7. மந்தியொன்று, கெட்டியாக வயிற்றைப் பிடித்துக் கொள்ளத் தெரியாத, தன் குட்டியைத் தானும் கையாற்பிடித்து கொள்ள மறந்துவிட்டது. அதனால் அக்குட்டி ஆழ்ந்த மலைப்பிளவிலே விழுந்து மாண்டுவிட்டது. அதைக்கண்ட மந்தி தன் சுற்றமுடன் கூடிக் கூச்சலிட்டு அழுகின்றது.  கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு, முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றி சிறுமையுற்ற களையாப்பூசல்                 (311--314) 8. குரங்கும் ஏற முடியாமல் கைவிட்ட மலையுச்சியிலே கண்ணேணி வழியாகக் கானவர்கள் ஏறிச் சென்றனர். அங்குள்ள தேன் அடையிலிருந்து தேனைக் கைக்கொண்டு மகிழ்ந்து ஆரவாரிக்கின்றனர்.  கலை, கையற்ற காண்பின் நெடுவரை, நிலை பெய்திட்ட மால்பு நெறியாகப், பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை.          (315-317) 9. குறுநில மன்னர்களின் பாதுகாவல்களை அழித்துக் கானவர்கள் ஆரவாரம் புரிகின்றனர்.  அரும்குறும்பு எறிந்த கானவர் உவகை             (318) 10. குறவர்கள், தம் அரசனுக்குப் புதிய திறையாகக் கொடுக்கத் தகுந்ததென்று கருதிப் புதிய தேனைச் சேமித்தனர். அந்த மகிழ்ச்சியால்  அவர்கள் தங்கள் மகளிருடன் மான்தோல் போர்த்த சிறுபறை முழங்கும்படி மலையுச்சியிலே குரவைக் கூத்தாடுகின்றனர்.  திருந்துவே லண்ணற்கு விருந்துஇறை சான்ம்என, நறவு நாள் செய்த குறவர், தம் பெண்டிரோடு   |