| 188 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |  
 
 மான்தோல் சிறுபறை கறங்கக், கல்லென வான்தோய் மீமிசை அயரும் குரவை.          (319--322) 11. நல்ல அழகுள்ள தேர் ஓடிவரும்போது கேட்கும் ஓசையைப் போல, ஆற்று வெள்ளம் மலைப் பிளவுகளிலே விழும்போது ஓசை கேட்கின்றது.  நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தென்ன கல்யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கிசை       (323--324) 12. பெரிய நீர்ச் சுழலிலே மாட்டிக்கொண்ட யானையை, அதன் கோபத்தைத் தணித்து, அதைக் கட்டுத்தறியிலே கட்டுவதற்காகப் பாகர்கள் யானை மொழியிலே பேசுகின்றனர். அவ்வோசை கேட்கின்றது.  நெடுஞ் சுழிப் பட்ட கருங்கண் வேழத்து, உரவுச் சினம் தணித்துப் பெருவெளில் பிணிமார் விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை          (325--327) 13. தினைப்புனத்திலே கிளியோட்டும் பெண்கள் மூங்கி்ல் தட்டையை அடித்துக் கிளிகளை விரட்டுகின்றனர்; அவர்கள் குரலோசை கேட்கின்றது.  ஒலிகழைத் தட்டை புடையுநர், புனந்தொறும் கிளிகடி மகளிர் விளிபடுபூசல்.                (328--329) 14. கிடையிலிருந்து பிரிந்து வந்த காளையும், மலையிலிருந்து வந்த காட்டுப் பசுவின் காளையும், இடையரும் குறவரும் கண்டு ஆரவாரம் செய்யும்படி ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு போர் செய்கின்றன.  இனத்தில் தீர்ந்த துளங்கு இமில் நல்லேறு, மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை, மாறாமைந்தின் ஊறுபடத் தாக்கிக் கோவலர் குறவரொடு ஒருங்கியைந்து ஆர்ப்ப.          (330--333)   |