பக்கம் எண் :

மலைபடுகடாம்193

செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன
வேய்கொள் அரிசி, மிதவை சொரிந்த
சுவல் விளை நெல்லின், அவரையம் புளிங்கூழ்.
அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட,
அகலுள் ஆங்கண் கழிமிடைந்து இயற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவீர்,
பொன்னறைந்தன்ன நுண்ணேர் அரிசி
வெண்ணெறிந்து இயற்றிய மாக்கண் அமலை,
தண் என் நுண்இழுது உள்ளீடாக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்.         (434--443)

இவ்வடிகள் மருத நிலத்திலே வாழும் ஏழைகள் உணவைக் காட்டுகின்றன.

கோரைகள் வளர்ந்திருக்கும் வயல்களிலே வலைஞர்களால் பிடித்துக்கொண்டு வரப்பட்ட வாளைமீன்-தூண்டிலின் மூலம் பிடித்த யானையின் கையைப் போன்ற பெரிய வரால்மீன்-துடிக்கண் போன்ற இறைச்சித் துண்டு-இவைகளைப் பழங்குடி மகளிர் கொடுப்பார்கள். நண்டுகள் திரிகின்ற வயற்கரையிலே மலைபோலக் குவிந்திருக்கின்ற போரை அடித்தும், வயலிலே அறுத்தும் உழவர்கள் கொண்டு வந்த நெல்லால் ஆகிய அரிசிச் சோற்றையும் அளிப்பார்கள். விளங்குகின்ற பானையிலே ஊற்றி வைத்திருக்கின்ற மதுவையும் கொடுப்பார்கள். இவைகளைக் காலைப் பொழுதிலே எந்தக் களத்திற்குப் போனாலும் பெறுவீர்கள்.

கண்பு மலி பழனம் கமழத்துழைஇ
வலையோர்தந்த இரும் சுவல் வாளை,
நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டில்
பிடிக்கை அன்ன செங்கண் வராஅல்,
துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்
ஞெண்டாடு செறுவில் தராய்க்கண் வைத்த