| 194 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ, வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத் துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல் இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும் பெறுகுவிர். (454)--464) இவ்வடிகள் உழுதொழில் செய்து வாழும் தமிழ்நாட்டுப் பழங்குடி மக்களின் வாழ்க்கையை விளக்குகின்றன. இத்தகைய பழந்தமிழர்களே இன்று தாழ்த்தப்பட்ட சமூகமாக நமது நாட்டிலே வாழ்கின்றனர். இவைகள், சிற்றூர்களிலே வாழும் மக்கள், ஆயர்கள், மருத நிலத்திலே வாழும் மக்கள், உழவர்கள் ஆகியோர் வாழ்க்கையையும், அவர்களுடைய விருந்தோம்பும் சிறப்பையும் குறிக்கின்றன. தமிழ் மக்கள் விருந்தோம்பும் பண்பாட்டிலே சிறந்தவர்கள் என்பதற்கு இவைகளே சான்றாம். பாம்புக்கு வணக்கம் நாகப்பாம்பை வணங்கும் வழக்கம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டிலிருந்தது. நாகத்தையே வழிபடு தெய்வமாகக் கொண்ட ஒரு வகுப்பினர் தமிழ்நாட்டிலே வாழ்ந்தனர். அவர்களைத் தான் நாகர்கள் என்ற பெயரால் அழைத்தனர். இந்த நாகர்கள் வாழ்ந்த இடங்களைத்தான் நாகப்பட்டினம், நாகர்கோயில் என்கிற பெயர்களால் அழைத்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு கூட்டத்தாரிடமிருந்த இப்பழக்கம் நாளடைவில் தமிழ் மக்கள் பலரிடமும் பரவிவிட்டது. சிறப்பாகப் பெண்கள்தாம் நாகத்தை வணங்கும் வழக்கத்தை மிகுதியாகப் பின்பற்றினர். இதற்கு இந்நூல் ஆதரவளிக்கின்றது. நீங்கள் போகும் வழியிலே பாம்புகள் மறைந்து பதுங்கிக் கிடக்கும் பள்ளங்கள் உண்டு. அவற்றைக் கவனித்து மரத்தின் மேல் ஏறிப் பாருங்கள். விறலியர் அந்தப் பாம்புகளைக் |