பக்கம் எண் :

மலைபடுகடாம்195

கையால் வணங்கி வேண்டிக் கொள்ளும்படி செய்யுங்கள். பாம்பற்ற நல்ல வழயிலே நடந்து வலப்பக்கத்து வழியிே்ல போங்கள்.

கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு மாருளவே.
குறிக்கொண்டு மரங்கொட்டி நோக்கிச்
செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச,
வறிதுநெறி யொரீஇ, வலம் செயாக் கழிமின்        (199--202

செங்கண்மா நகர்

இந்நூலாசிரியர் காலத்திலே செங்கண்மாநகரம் எவ்வளவு சிறப்புடன் விளங்கிற்று என்பதை இந்நூலிலே காணலாம்.

நன்னனுடைய செங்கண்மா நகரம் சேயாற்றங் கரையில் உள்ளது. அந்நகரிலே செல்வத்திற்குக் குறைவில்லை. சுற்றிலும் உயர்ந்த மதில் சூழ்ந்தது அந்நகரம். பரம்பரையாக அந்த ஊரிலேயே வாழ்கின்ற பழங்குடி மக்கள் இருக்கின்றனர். பெரிய கடைவீதிகள் உண்டு. தெருக்கள் ஆற்றைப் போலக் காணப்படுகின்றன. பகைவர்கள் அஞ்சும்படியான சிறிய தெருக்களில் கூட திருவிழாக்காலத்தைப்போல-கடலின் ஓசை போல-மேகத்தின் ஒளிபோல-இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருக்கும். மலையென்று சொல்லும்படியும் மழையென்று சொல்லும்படியும் உயர்ந்த மாளிகைகள் பல உள்ளன. அன்புடன் விரும்பி வசிப்பதற்கேற்ற குளிர்ந்த சோலைகளிலே வண்டுகள் இசை பாடிக்கொண்டிருக்கும். இத்தகைய பழமையான வெற்றி பொருந்திய அந்நகரம் தூரத்தில் இல்லை

சேயாற்றின்
நிதியந் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்,
பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ
வியலிடம் பெறாஅ விழுப் பெரு நியமத்து