| 196 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
யாறுஎனக் கிடந்த தெருவில், சாறுஎன இகழுநர் வெரூஉம் கவலை மறுகின் கடலெனக் கார்என ஒலிக்கும் சும்மையொடு, மலையென மழையென மாடம் ஓங்கித் துனிதீர் காதலின் இனிதமர்ந்து உறையும் பனிவார் காவில் பல்வண்டு இமிரும், நனி சேய்த்தன்று அவன் பழவிறல் மூதூர். (476--486) நன்னன் பெருமை இப்பாட்டின் தலைவனாகிய நன்னன் சிறந்த வீரன். புலவர்களுக்குப் பொருள் கொடுத்துத் தமிழை வளர்த்தான். தன்னை இகழ்வோரைப் போரிலே வென்று அடிமையாக்குவான். புகழ்வோர்க்குத் தன் அரசு முழுவதையும் கொடுத்துவிடுவான். அவனுடைய அவைக்களத்திலே சிறந்த கல்வியும் அறிவுமுடைய பலர் குழுமியிருந்தனர். இவ்வாறு நன்னனுடைய நற்பண்புகளைக் கூறுகிறது இந்நூல். அழியாத நல்லபுகழ் உலகுள்ள வரையிலும் நிலைத்திருக்கும்படி பகைவர்கள் பலரையும் தோல்வியுறச் செய்தவன். அப்பகைவர்கள் திறையாகத் தந்த அருங்கலன்களையெல்லாம் புலவர்களுக்கு மாரியைப்போல் மகிழ்ந்து சொரிவான். தன்னையிகழ்வோரை அடிமைப்படுத்தும் ஆற்றலுடையவன். புகழ்வோருக்குத் தன் அரசாட்சியின் செல்வமுழுவதையும் கொடுத்து விடுவான்: கொடுத்தும் அவன் ஆசை அடங்காமல், பருவகாலத்தில் மழைபெய்த மேகம் மீண்டும் மழைபெய்து கொண்டேயிருப்பதுபோல, அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டேயிருப்பான். இதுதான் அவன் சபையில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சி. நல்லோரும், கற்றறிந்த நாவலரும் அவன் சபையிலே நிறைந்திருப்பார்கள். அவர்கள், கல்வியிலே வல்லவர்கள், தங்கள் திறமையை வெளிக்காட்டாமல் மறைத்து வந்தாலும், |