| 20 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற நூல்களும் ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டன. பத்துப்பாட்டு ஆசிரியர்கள் தாங்கள் எண்ணிய செய்திகளை, பார்த்த நிகழ்ச்சிகளைக் கேட்போர்க்கு விளங்கும்படி தெளிவாகச் சொல்லுவதற்காகவே ஆசிரியப்பாவிலே தங்கள் பாடல்களைப் பாடினர். உரையாசிரியர் பத்துப்பாட்டுக்கு உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரையெழுதியிருக்கிறார், தொல்காப்பியத்துக்கும் சங்கநூல்கள் பலவற்றுக்கும் இவர் உரையெழுதியுள்ளார், இவருடைய உரை கிடைக்காவிட்டால் நாம் பத்துப்பாட்டின் பொருளைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாது, ஆனால் இவர் நூலாசிரியர் கருத்தைஒட்டி உரை கூறமாட்டார், தன் கருத்தைப் பாட்டிலே புகுத்தி உரையெழுதுவார், பாட்டுக்கு நேராகப் பொருள் சொல்லும் வழக்கமும் இவரிடம் இல்லை, பதங்களை மாற்றியமைப்பார், ஐந்தாவது அடிக்கும் ஐம்பதாவது அடிக்கும் எண்பதாவது அடிக்கும் முடிச்சு போடுவார், ஒருபாட்டில் உள்ள சொற்களையும், அடிகளையும் அப்படியே கலைத்துக் குலுக்கிக் கொட்டிவிடுவார், பிறகு தன் விருப்பப்படி சொற்றொடர்களையும், சொற்களையும் பொறுக்கி அமைத்துப் பொருள் கூறுவார், இது இவருடைய வழக்கம், பத்துப்பாட்டுக்கும் சீவகசிந்தாமணிக்கும் இந்தப் பாணியில்தான் உரையெழுதியிருக்கின்றார், நூலாசிரியரின் கருத்தைக்காட்டிலும் இன்னும் சிறந்த கருத்தைக் காட்டவேண்டும் என்பதே இவருடைய நோக்கம். இவருடைய உரை மிகச் சிறந்ததென்பதில் ஐயமில்லை; இவ்வுரையின்றேல் பல சொற்களுக்குப் பொருள் தெரிந்து கொள்ள முடியாது; பண்டைப் பழக்கவழக்கங்கள் |